மரகதவண்ணன் மாயன் மார்கழியின் கண்ணன் 2

மரகதவண் ணன்மாயன் மார்கழியின் கண்ணன்
அரவுப் படுக்கையில் அஞ்சனன் யோக
அரிதுயில் கொள்வான் அரங்கப் பெருமாள்
வரம்பெற பாடிடுபா வை

----பதிவான ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

மரகதவண் ணன்மாயன் மார்கழியின் கண்ணன்
அரவுப்பூம் படுக்கையிலே அஞ்சனன்ஆழ் யோக
அரிதுயிலில் ஆழ்வான்நம் அரங்கத்துப் பெருமாள்
வரம்பெறவே பாடிடுபா வைநித்தம் பாவாய்

----காய் காய் காய் மா கலிவிருத்தம் மோனைப் பொலிவுடன்
ஈற்றுச் சீர் மாவையும் காய் ஆக்குவோம்

மரகதவண் ணன்மாயன் மார்கழியின் எழில்கண்ணன்
அரவுப்பூம் படுக்கையிலே அஞ்சனன்ஆழ் யோகமெனும்
அரிதுயிலில் ஆழ்வான்நம் அரங்கத்து கருபெருமாள்
வரம்பெறவே பாடிடுபா வைநித்தம் எம்பாவாய்

------ஆக்கியதில் -காய் முன் நிரை வரும் கலித்தளை மிகுந்து
தரவு கொச்சகக் கலிப்பா ஆனது

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-23, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே