ஒரு தாய் பெண்துறவிபோல்
வந்தவள் சொற்கேட்டு பெற்றவளை மறக்கிறான்
தான்சேர்க்கா தந்தை சொத்தில் முழுபாகம் கேட்கிறான்
தாயின் தலைமகன் அவன்
அதைக் கேட்டு மனம்நொந்த தாயும்
" ஐயகோ ! என்ன விதியடா இறைவா
பத்து மாதம் தவமாய் சுமந்து பெற்ற
இவன்தான் என்பெரும்சொத்து என்று
இன்றுவரை எண்ணி இருந்தேனே இவனை
இது வெறும் மாயை என்று நீதீர்பளித்தாயோ தேவா"
என்று மனதுக்குள்ளே வெதும்பினால் பிறகு
அக்கணமே வேறொன்றும் யோசிக்காமல்
சொத்தும், பற்றும். பந்தமும். பாசமும்
மற்றும் எல்லா உலகியலையும் துறப்பேன்
என்று சூளுரைத்து தன வீட்டையும் துறந்து
வெளியேறினாள் தாய் .......மகனே இனி
இறைவன் ஒருவனே எனக்கெல்லாம் என்
பெருந்தனம் அவனே .....அவன் தொண்டே இனி
எனக்கு அவன் வகுத்த வழி...என்று உரக்க
கூறிக்கொண்டே...வீட்டை விட்டு வீட்டருகே
இருக்கும் பெருமாள் கோயில் சென்றடைந்தாள்
இனி யாமார்க்கும் பணியெல்லாம் இறைப் பணி ஒன்றே
வேறில்லை எமக்கே என்று சங்கல்பித்து
ஒரு பெண் துறவிபோல கோயிலில் அடைக்கலம்
ஆனாள் தூய மாதாம் அன்னாள்..
இதோ இன்று காலை அவள் மகன்
அவளைக்காண ங்கடைந்தான்...கண்டான்
அங்கு அன்னையை....கோயில் தீப விளக்குகள்
மற்றும் மடப்பள்ளி பாத்திரங்கள் சுத்தம்
செய்து வைத்துவிட்டு.....இதோ அங்கு
மற்ற சில பெண்களுடன் திருத்துழாய்
மற்றும் கோயிலில் பூத்த மலர்களால்
பெருமாளுக்கு மாலை தொடுக்க....
அம்மா என்று அழைத்தான் மகன்...
வீட்டுக்கு போகலாம் வா என்றான்...
நீ போய்விட்டு வா மகனே...இதுதான்
இந்த கோயிலே என் வீடு ...இறைப் பணியே
இனி என்பணி என்று ஒரு பெண் துறவிபோல்
விளக்கி தன பாதையில் சென்றாள்
மகனை நோக்காது...எல்லாம்
துறந்த பின் துறவிக்கு ஏது பாசம் ?