ஒக்கூ கவிதை

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

கூரையில் ஓட்டை

வீட்டிற்குள் விழுகிறது

நிலவொளி

🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷🧷

உழைப்புக்கேற்ற ஊதியத்தைக்

கேட்காமலே கொடுக்கும்

காலம்

🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗

எதையும் காலியாக

இருக்க விடுவதில்லை

காற்று

📎📎📎📎📎📎📎📎📎📎📎

சுய முன்னேற்றம் பற்றி

எனக்கு சொன்னது

பனை மரம்

🖇️🖇️🖇️🖇️🖇️🖇️🖇️🖇️🖇️🖇️🖇️

கோவில் திருவிழாவில்

காணமல் போய்விடுகிறது

கிராமத்தின் ஒற்றுமை

*கவிதை ரசிகன் குமரேசன்*

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-Dec-23, 6:59 pm)
பார்வை : 78

மேலே