கண் இருந்தா பாத்துக்கோ
பல்லவி
×××××××
கண் இருந்தா பாத்துக்கோ/
காது இருந்தா கேட்டுக்கோ/
உண்மையினா நீயும் ஒத்துக்கோ/
மனசு நிறைஞ்சு ஏத்துக்கோ../
(கண் இருந்தா ...)
சரணம் 1
××××××××
ஏரளமாகப் பணமிருந்த உதவிக்கோ/
ஏழைகளின் சிரிப்பை ரசித்துக்கோ/
எங்கோ போகும் கவலைகள் கவனிச்சுக்கோ/
அங்கேதான் நிம்மதியென்று தெரிஞ்சுக்கோ/
(கண் இருந்தா ..)
சரணம்:2
××××××××
வாழவைத்தால் வாழ்வோம் புரிஞ்சுக்கோ/
வாழையடி வழையாக நம் தலைமுறைக்கோ/
வான்புகழ் புண்ணியம் அறிஞ்சுக்கோ/
வள்ளல்யென் சிவந்தகையைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ/
(கண் இருந்தா...)
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்