தாமரைமடல் விரியதண்பொழில் அலைவிரிந்திட

தாமரைமடல் விரியதண்பொழில் அலைவிரிந்திட
திசைகிழக்கினில் இளம்கதிர்விரிந் தெழில்தூவிட
கொடிமலர்அழ கினிலசைந்திட இளம்காற்றினில்
இதழிரண்டினில் இளநகைபுரிந் தழகுதனிலே
வந்தாயோ
வஞ்சியிளம் மானே நெஞ்சில் காதலேந்தி
கொஞ்சும் காதல் கவிதைநான் தரவே

---கனிச்சீர்கள் மிகுந்து கனி முன் நிரை வரும் ஒன்றிய
வஞ்சித் தளைகள் செறிந்தும் தனிச் சொல்லும்
இரண்டடி சுரிதகம் ஆசிரிய ஓசையும் பெற்று
முச்சீர் சிந்தடிகள் நான்கு கொண்ட
சிந்தடி வஞ்சிப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jan-24, 7:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே