ஒப்பிலா பேரெழில் ஓவியமே உன்னழகை

ஒப்பிலா பேரெழில் ஓவியமே உன்னழகை
ஒப்பிட்டுச் சொல்லிட ஓருவமை இல்லையே
செப்பிடுவாய் செந்தமிழ்ச் செல்வியெப்பா வால்பாட
முப்பாலா னும்தோற்பா னே

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
----எதுகை --ஒப் ஒப் செப் முப்
----மோனை --ஒ ஓ ஒ ஓ செ செ ---அதே மோனை
---------------------மு னே ----இன மோனை

ஒப்பிலா பேரெழில் ஓவியமே உன்னழகை
ஒப்பிட்டுச் சொல்லயிலை ஓருவமை -- எப்பாவால்
செப்பிடுவாய் செந்தமிழ்ச் செல்வி உனைப்பாட
முப்பாலா னும்தோற்பா னே

----ஒருவிகற்ப நேரிசை வெண்பா

---- முப்பாலான் = அறம் பொருள் இன்பமெனும் முப்பலில்
குறட்பா தந்த வள்ளுவன்

எழுதியவர் : (6-Jan-24, 10:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே