குழலோசையில் தெரியும் கண்ணன் வடிவு ----பஃறொடை வெண்பா

கண்ணா மணிவண்ணா உன்னை எனதுபுறக்
கண்களால் காண முடியவில்லை என்றாலும்
உன்நாம மாயிரத்துள் ஒன்றாயினும் வாயினால்
நான்பாட காதிலுனது வேணுகானம் கேட்குதய்யா
இந்தசாம கானத்தில் உன்னைநான் மாலே
ஒலியின் வடிவிலே கண்டேன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Jan-24, 12:52 pm)
பார்வை : 27

மேலே