அவள் கூந்தலிலின்று வந்த நறுமணம்

இவளென்ன மண்ணில்வன் துதித்தவளா இல்லை
இவளபூமிக்கு வந்த வெண்ணிலவோ புரியவில்லை
நதியில்நீ ராடிவந்து கரையில் வந்தமர
கார்முகில் துகளொப்ப கருங்கூந்தல் அவள்தோள்களில்
சதிராட அங்குவந்த காலைத் தென்றலதை
அதிர சமாய்வருட விண்ணளவு நறுமணம்
பரவிநிற்க இவள்தேவ கன்னிகை எனநினைத்தேன்
காரணம் இவள்கூந்தல் தந்த அந்தமணம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Jan-24, 3:57 pm)
பார்வை : 118

மேலே