தேசிய வாக்காளர் தினம்
*தேசிய வாக்காளர் தினம் இன்று*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*தேசிய வாக்காளர் தினம்*
*சிறப்பு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
தேர்தல் ஆணையம்
பிறந்த தினத்தை
தேசிய வாக்காளர் தினமாக
கொண்டுகிறது
ஒவ்வொரு ஆண்டும்....
பதினெட்டு வயது
முடித்தவர்களுக்கு
தேர்தல் ஆணையப் பல்கலைக்கழகம்
"வாக்காளர்
பட்டத்தை" அளித்து
கௌரவிக்கிறது.....
வாக்காளர்களுக்குச்
சாதி மதம் பால்
சமயம்
கல்வித்தகுதி இல்லை என்று தான் சொன்னதே ! தவிர
நீதி நேர்மை பகுத்தறிவு
கடமை இல்லை என்று
சொல்லவே இல்லை.... !!
ஒவ்வொரு
தேர்தலின் போதும்
வாக்குரிமை
"அடமானம்" வைக்கப்படுகிறது...
மை வைத்து தான்
மயக்குவார்கள்....
தேர்தல் தேசத்தில் தான்
மயக்கியப்பின்
மை வைக்கப்படுகிறது
பிரியாணி இட்ட
ஒரு முட்டைக்கு ஆசைப்பட்டு
பொன் முட்டையிடும் வாத்துக்களையே
கொடுத்து விடுகிறோம்.....
ஒரு நாள்
கூலியைக் கொடுத்துவிட்டு
ஒவ்வொரு நாள் கூலியையும்
எடுத்துக் கொள்ளப்
போகிறார்கள் என்பதை
நாம் வென்று
அறியப் போகிறோம்....?
"அழுகிப்போன
மதுரசத்தை" தந்து விட்டு
நம்மிடம் உள்ள
"அமுதத்தையே"
வாங்கிக் கொள்வதை
நாம் என்று
உணரப் போகிறோம்...?
"இலவச பிணங்களை" கொடுத்துவிட்டு
"ஆன்மாவை"
வாங்கிச்
சென்று விடுகிறார்கள்...
நாம் என்று
திருந்தப்போகிறோம்..... ?
பிரச்சாரங்களே
விபச்சாரங்களானப் பிறகு
இங்கு
"பத்தினி" யார் ?என்று
வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது...
விரல்களை விற்று
மோதிரம் வாங்கி
என்ன செய்யப் போகிறோம்?
மானத்தை விற்று
ஆடை வாங்குவதால்
என்ன பெருமை...?
வாக்கு இயந்திரங்களுக்கே
ஊழல் செய்ய
கற்றுக்கொடுத்த
நமது அரசியல்வாதிகளிடம்
நாம் எந்த அளவுக்கு
உசராக இருக்க வேண்டும் ?
வாக்குச்சாவடியில்
வைக்கும் மை
"மச்சமாக" இருக்க
வேண்டியது
நாம் "எச்சமாக" அல்லவா
மாற்றிக் கொண்டிருக்கிறோம்...
கட்சிகளுக்கு
வாடிக்கையாளராகவே
எப்போதும் இருக்கிறோம்....
தேசத்திற்கு
வாக்காளராக
எப்போது இருக்கப்போகிறோம்..?
♥ _தேசிய வாக்காளர் தின_
_நல்வாழ்த்துக்கள்_♥
*கவிதை ரசிகன் குமரேசன்*