இருக்கிறது ஆனால் இல்லை…
இருக்கிறது ஆனால் இல்லை…!
வானத்தில் பூத்து
குலுங்கும் மலர்கள்
பறித்து பையில்
போட முடிவதில்லை
நீரில் எழும்பும்
குமிழ்கள்
கையில் எடுத்து
இரசிக்க
முடிவதில்லை
வானத்தை வளைத்து
காட்டும் வானவில்
அதன் நிறங்கள்
நிலையாய் நிற்பதில்லை
சூரிய தகிப்பில்
கண்ணில் அலையாய்
தெரியும் நீரோட்டம்
அருகில் சென்றால்
இருப்பதில்லை
நம்மை வழி
நடத்தும்
நம் மனமோ
கண்ணில் காண
முடிவதில்லை