காதல் காதல் நீ❤️💓

முதல் பார்வையில் உன்னை ரசிக்க

முகமூடியில் உன் முகம் நீ மறைக்க

பெண்ணே நீ யார் என்று என் இதயம்

நினைக்க

பேரின்பத்தில் நான் மிதக்க

பிரியமாய் நான் உன்னை ரசிக்க

புரியாமல் நீ இருக்க

உன் பின்னால் நான் நடக்க

உன் மனதில் நான் இருக்க

மௌனமாய் நீ சிரிக்க

காதல் என அதை நான் நினைக்க

எழுதியவர் : தாரா (31-Jan-24, 2:25 am)
சேர்த்தது : Thara
பார்வை : 493

மேலே