நாவில் தமிழாட நல்விழியில் காதலாட
தென்றலில் கூந்தலாட திங்கள் முகத்திலாட
புன்னகையில் முத்தாட பூவினில் வண்டாட
நாவில் தமிழாட நல்விழியில் காதலாட
தேவிநீ என்கவிநெஞ் சில்
தென்றலில் கூந்தலாட திங்கள் முகத்திலாட
புன்னகையில் முத்தாட பூவினில் வண்டாட
நன்நாவில் சொல்லாட நல்விழியில் காதலாட
என்நெஞ்சில் ஆடும் இயல்