ஒரு கோழியின் வேண்டுதல்
வீட்டினிலே வளர்க்கப்பட்ட
கோழிகளும் இரண்டு உண்டு
துள்ளி விளை யாடி நிதம்
ஆடிப் பாடி மகிழ்ந்தனவே
நாளை உனக்கு விடுதலையாம்
நாய்கள் யாவும் ஓழமிட
காலை உனக்கு கடைசி என
காக்கையும் கரைந்திடவே
வீடு திரும்பும் தந்தையவர்
விரைந்து நலம் கண்டிடவே
வெட்டப்பட்ட கோழி ஒன்று
இறைவனடி சேர்ந்ததுவாம்
பாடி மகிழ்ந்த தோழன் அவன்
பானையிலே மிதந்திடவே
மீதமிருந்த கோழி தினம்
ஆண்டவனை வேண்டியது
வீட்டில் உள்ள அனைவருமே
நலங்களுடன் வாழ்க என்று