வாங்கல்
***********
வாங்கும் பணமுந்தன் வாழ்வில் பெருமூச்சு
வாங்கா வகைநிற்க வாங்கு
*
வாங்கி முடிவதற்குள் வந்தவழி யோடிவிடின்
வாங்குமுன் பூமுகந்தே வாங்கு
*
வாங்கும் சிறுகடன் வாழ்விலுன் மானத்தை
வாங்கா திருப்பதற்கு வாங்கு
*
வாங்குவார் வாங்கும் வரம்பற்ற வற்றைநீ
வாங்காமல் வாழ்வாய்வாழ் வாங்கு
*
வாங்கிலாப் பள்ளியில் வந்தமர்ந்து கற்றவர்
வாங்கி யமர்ந்தனர் வாங்கு
*
வாங்கு மெதையும் வனப்பிற் மயங்கியே
வாங்குவார்க் கஃதல வாங்கு
*
வாங்கும் புகழ்பேரை வைத்து தலைநிமிர
வாழ்வனுப வத்தடி வாங்கு
*
வாங்குவோர் வாங்காத வற்றைநீ வாங்கவே
வாழ்வல்ல வாங்குவதை வாங்கு
*
வாங்கும் படியுரைப்பார் வாக்கைச் செவிவாங்கி
வாழ்வில் பதங்கங்கள் வாங்கு
*
வாங்கும் பொருளல்லா வாழ்க்கைத் துணையோடு
வாழ்வில் வசந்தங்கள் வாங்கு
*
மெய்யன் நடராஜ்
**