குலோத்துங்க சோழன் கோவை - நூல் - மூன்றாவது - வன்புறை
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
மூன்றாவது - வன்புறை.
அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;
அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;
அவை வருமாறு:
அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.
பெருநயப் புரைத்தல்.
தெய்வத்திறம் பேசல்.
பிரியே னென்றல்
(இ-ள்) தலைவன் பிரிவனென்னுங் கவற்சியால் தலைவி யுடல் விளர்ப்பக் கண்ட தலைவன் உன்னைவிட்டுப் பிரியமாட்டே னென்று கூறுதல்.
கட்டளைக் கலித்துறை
என்றேனு மெய்யு முயிருமொப் பாமென்ன யானஞ்சவே
னொன்றே யலவிரண் டேயென்கை யாலொரு நாள்விளவிற்
கன்றே யெறிந்த குலோத்துங்க சோழன்கல் யாணியன்னீர்
சென்றே யுமைப்பிரி யேன்பிரிந் தாலெங்ஙன் றேறுவனே! 26