புதியன உன் ஆதாரம்

பாட்டி சுட்ட வடையை
வாயில் கவ்வி காகமும்
மரத்தின் கிளையில் அமர்ந்ததாம்.
கபடம் நிறைந்த குள்ளநரியும்
வடையை கவர நினைத்தே
அழகிய காகமே உன்
அழகிய வாய் திறந்து
பாடுக பாட்டொன்று எனச்சொல்ல
தன்னிலை மறந்து காகமும்
வாயை திறக்க வடை கீழ்விழ
நரியும் எடுத்து ஓடியதாம்
காகம் ஏமாந்து போனதாம்
பாட்டி சொல்ல சொல்ல
வாய் திறந்து கேட்டிருந்தோம்.
இன்றோ
அதே பாட்டி..அதே வடை..
அதே காகம் ...அதே நரி
முடிவுதான் வேறு.
வாயில் இருந்த வடையை
காலில் இறுக்கி வாய் திறந்து
பாடிச்சாம் காகம்

ஏமாந்து போச்சாம் நரி.
மாத்தி யோசி...புதிதாய் சிந்தி..
உன் மூளையை கூராக்கு.
பழையன உன் அஸ்திவாரம்
புதியன உன் ஆதாரம்

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (16-Feb-24, 7:02 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 60

மேலே