குலோத்துங்க சோழன் கோவை - நூல் - நான்காவது – தெளிவு

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

மூன்றாவது - வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;

அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;

அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;

அவை வருமாறு:

அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.

பெருநயப் புரைத்தல்.

தெய்வத்திறம் பேசல்.

பிரியே னென்றல்

பிரிந்து வருகென்றல்.

இடமணித் தென்றல்.

இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.

3 - வன்புறை முற்றிற்று.

நான்காவது – தெளிவு.

அஃதாவது – தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத் தெளிந்தாற்றுவது; இது – வகையும் விரியும் இல்லாமல் நின்றது.

கட்டளைக் கலித்துறை
(வை - வ மோனை, ய் இடையின ஆசு, யா எதுகை)

வையார் நமைத்தனி வைத்தாலு மீள மனமறுப்புச்
செய்யார்நங் காதலர் தேறுநெஞ் சேதெய்வ வேதம்பொய்த்தும்
பொய்யாத சங்கம ராச வரோதயன் பொற்புயத்துக்
கொய்யார மாலைக் குமார குலோத்துங்கன் கோழியிலே! 29

4 – தெளிவு முற்றிற்று.

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (17-Feb-24, 6:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே