கவிஞர் கட்டா கவிஞர் பட்டா

ஒரு வார இலக்கிய இதழ் அலுவலகம்:
ஆசிரியரிடம் உதவியாளர்: ஐயா உங்களைப் பார்க்க ஒரு கவிஞர் வந்திருக்கிறார். நாம் நமது வார இதழ் ஆசிரியர் குழுவிற்கு உதவி ஆசிரியர்கள் பதவிக்கு விளம்பரம் செய்திருந்தோம் அல்லவா. அதற்காக நேர்முகத் தேர்வுக்கு அந்தக் கவிஞர் வந்திருப்பதாகக் கூறினார்.
@@@@@@
அவரை வரச்சொல்லு தம்பி.
@@@@@@@
வணக்கம் ஐயா.
@@@@@
வணக்கம். உங்களைப் பற்றிய விவரங்களைக் கூறுங்கள் தம்பி.
@@#@@#
ஐயா என் பெயர் பரமன். பட்டனூர் எனது ஊர். முதுகலை தமிழ் இலக்கியத்தில் தங்கப் பதக்கம் பெற்று தேர்ச்சி பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பல மாத, வார இதழ்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவை, குறுஞ்செய்திகள் வெளியாகி உள்ளன. தங்கள் வார இலக்கிய இதழில் எனது கவிதைகள் பல வெளியாகியுள்ளன.
@@@@@@@
தம்பி உங்கள் பெயரை மீண்டும் சொல்லுங்கள்.
@@@@@@@
பரமன்.
@@@@@@
கேள்விப்பட்ட பெயராக உள்ளதே. உங்கள் ஊர்?
@@@@@
பட்டனூர்
@@@#@
உம். இப்போது நினைவுக்கு வருகிறது. பட்டனூர் பரமன் தானே நீர்?
@@@@@@@

ஆமாம் ஐயா.
@@@@@@#
மிக்க மகிழ்ச்சி. உங்களை எங்கள் ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியராகச் சேர்த்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஒரு நிபந்தனை.
@@@@@@
கூறுங்கள் ஐயா.
@@@####@
பட்டனூர் உங்கள் ஊர். பரமன் உங்கள் பெயர். அந்தக் காலக் கவிஞர்கள் தங்கள் ஊர் பெயர்களை அவர்கள் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வார்கள். காலம் மாறிவிட்டது. சுருக்கமான பெயர்களே இன்றைய எதிர்பார்ப்பு. எனவே உங்கள் புனைபெயரை 'கவிஞர் பட்டா' என்று இருப்பது சாலச்சிறந்தது. சம்மதமா?
@@@@@@@
சரிங்க ஐயா.
@@@@@@@
மிக்க மகிழ்ச்சி. நம் சிறப்பு ஆசிரியர் பெயர் என்ன தெரியுமா?
@@@@@@@
கவிஞர் கட்டா.

@@@@@@
சரியாகச் சொன்னீர்கள். அவர் கட்டாம்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர். இயற்பெயர் கதிரேசன். அவரே விரும்பி 'கவிஞர் கட்டா' என்ற புனைபெயரை ஏற்றுக்கொண்டார்.
@@@@@@
மிக்க நன்றி ஐயா.

எழுதியவர் : (25-Feb-24, 8:47 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 41

மேலே