எதுக்குடா கட்சி மாறின

எதுக்குடா கட்சி மாறின?

@@@@@@@@@@@#@
வேட்டையாட வாய்ப்புள்ள கட்சிக்குப் போறதுதான் எனது ஒரே கொள்கை.‌

@@@@@@
என்ன வேட்டை?

#@@##@
என்ன‌ வேட்டையா? வசூல் வேட்டை.‌ நன்கொடை புத்தகம் அச்சடிச்சு பத்துப் பையன்களை அழைச்சிட்டு கடை கடைக்குப் போனா "இந்தக் கூட்டம் அந்தக் கூட்டம்" நடத்துறோம்னு நான் சேர்ந்துள்ள கட்சி தலைவர்கள் பேரைச் சொன்னாப் போதும். ஒவ்வொரு கடையிலும் நூறிலிருந்து ஐநூறு வரை வசூலாகும்.‌ நம்ம மாநகரை கால் நடையாச் சுற்றிவர இரண்டு வருசம் ஆகும்டா. ஒரு நாள் வசூல் வேட்டையில் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். வசூல் வேட்டைக்கு வர்ற பையன்களுக்கு ஆளுக்கு ஒரு பிரியாணியும் இருநூறு பணமும் தருவேன். மீதி எனக்கு. மாதம் ஒரு இலட்சம் வருமானம். தினம் நடைபயணம். நோய்நொடி இல்லாமல் இருக்கிறேன்டா.

@@#######
நீயெல்லாம் ஒரு அரசியல்வாதி.‌
@@######
எனக்குப் ஏதாவது பிரச்சினை வந்தாலும் எங்க கட்சி வழக்கறிஞர் அணி ஓடோடி வரும்டா.
@@@@@@@@
ஏமாற்றிப் பிழைக்கும் உன் அரசியல் தொழில் வாழ்க.

எழுதியவர் : மலர் (28-Feb-24, 4:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 47

மேலே