மூடி

மூடி
*****
சாடிக்கு மூடிச் சரியா யிலையெனில்
வேடிக்கைக் காட்டும் விதி
*
ஆகாயம் சூழும் அடர்மேக மூடிகள்
நீகாயா தாக்கும் நிலம்
*
வண்டுத்தே ணுண்ண வடிவிதழ் மூடிகள்
கொண்டுள மொக்கே குழகு
*
மூடித் திறக்கும் முழுக்குடி காரர்க்குத்
தேடிவரும் துன்பம் தினம்
*
மூடித் திறக்குமிமை மூடித் திறவாரை
மூடி மறைத்தல் முறை
*
மூடி மறைப்பதிலே முன்நிற்கும் மோசடியைத்
தேடித் தெரிந்தெடுத்தல் தீங்கு
*
வாய்மூடிக் கண்மூடி வாழப் பயின்றிடின்
தாய்நாட்டில் நிற்கத் தகும்
*
உலைவாயை மூடினும் ஊர்வாயை மூடா
நிலைவளர ஊடகங்கள் நீர்
*
அங்கமெனும் பானைக்கு ஆடையெனும் மூடியிட்டுத்
தங்கமெனக் காக்கத் தகும்
*
மூடித் திறவாத முத்திதழ் மோனத்தீ
நாடி நரம்பெரிக்கும் நச்சு
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Mar-24, 1:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 52

மேலே