மண்ணின் நிலவின் சிறப்பு

எத்தனையோ நிலவுகள் வானில் சஞ்சரித்தாலும்
சிந்தையைத் தட்டி எழுப்புவது எப்போதும்
பூமியின் சந்திரனே விண்ணிலிருந்து தன்னொளி
பரப்பி மண்ணவர் மனம் குளிரவைத்து
காதலர்க்கு கவிஞருக்கு என்றும் குரு
நிலவே அது முழுநிலவோ இல்லை பிறைநிலவோ
நிலவைப் பற்றி பாடா கவிஞர் இல்லையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Mar-24, 12:59 pm)
பார்வை : 50

மேலே