பேசாது ரசித்திருந்தேன் மௌனமாய் நான் நதிக்கரையினில்
பேசியது கிளிகள் காதல் மொழிகள்
மரக் கிளைகளில்
பேசாது மலர்ந்தன மௌன மொட்டுக்கள்
மலர்க் கொடியினில்
பேசிய காதல் மொழிகளை எழுதியது
தென்றல் மலரிதழ்களில்
பேசியே நடந்தன தமிழினில்
நதியலைகள்
பேசாது ரசித்திருந்தேன் மௌனமாய் நான்
நதிக்கரையினில்