கண்ணோடும் கருத்தோடும்

கண்ணோடும் கருத்தோடும்
24 / 03 / 2024
கண்ணோடும் கருத்தோடும்
கவிபாடும் கயல்விழியை
நெஞ்சோடு துஞ்சும்
பேரழகே முழுநிலவே
முகில்தழுவும் மலையோரம்
குளிர்தென்றல் போலெ
வரும் நாளில்
வாழ் நாளில்
ஒன்றாக இணைந்தே நாம்
இன்பம் காணுவோம்

பாடாத ஏழுஸ்வரம்
தானாக பாடிவரும்
தேனாக வழியும் இன்பகீதமே
தேனாக வழியும் இன்பகீதமே
தேடாத ராஜசுகம்
தெவிட்டாத தேனமுதம்
ஆனந்தம் சேர்க்கும்
புது உறவிலே
வரும் நாளில்
வாழ்நாளில்
ஒன்றாக இணைந்தே நாம்
இன்பம் காணுவோம்

சதிராடும் என்வாழ்வில்
சுதி சேர்க்க வந்தவளே
விதிமாற உள்ளம்
இங்கு ஏங்குதே
விதிமாற உள்ளம்
இங்கு ஏங்குதே
புதிதாக பிறந்ததுபோல்
புதிதாக பார்த்ததுபோல்
புதிதாக தொடங்குவோம்
நம் வாழ்வையே
வரும் நாளில்
வாழ்நாளில்
ஒன்றாக இணைந்தே நாம்
இன்பம் காணுவோம்
( விண்ணோடும் முகிலொடும் ,,,என்ற பாடல் மெட்டுக்கு
எனது வரிகள்.).

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (24-Mar-24, 11:56 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 82

மேலே