காலை ஓர் பயணம்

கிழக்கில் ஒரு பேருந்து ஏறி
கீழவாசல் சென்றிருந்தேன்
கீரைக்கட்டு வாங்கி நானும்
கிடுகிடுவென நடை நடந்தேன்

மேற்கில் ஒரு பாதை பிரிய
மேல மாசி வீதி சென்றேன்
மெத்தை ஒன்று ஆர்டர் செய்து
மெல்லமாக நடை நடந்தேன்

வடக்கில் ஒரு வண்டி எறி
வடக்கு மாசி வீதி வந்தேன்
வந்து குவிந்த மீன்களிலே
வஞ்சிரத்தை தேர்ந்தெடுத்தேன்

தெற்கில் ஒரு பெண்ணைக் கண்டு
தெற்குவாசல் நான் நடந்தேன்
அவளும் என்னை முறைத்துப்பார்க்க
அடுத்த கணம் வீடடைந்தேன்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (25-Mar-24, 8:50 am)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : kaalai or payanam
பார்வை : 90

மேலே