சிங்காரப் புன்னகையும் மணக்கும் மல்லிகையும்

சிங்காரப் புன்னகையும்
மணக்கும் மல்லிகையும்
+++++++++++++++++++++++

சிங்கமாகச் சீறினும்
சினமாகப் பொன்மனமே/
சிங்காரப் புன்னகையில்
சிலையான பொன்ரதமே/

மணக்கும் மல்லிகையும்
மடக்கும் பார்வையும்/
மனதுக்குள் சங்கமிக்க
மணமிடத் துடிக்குதே/

வளையோசை வளைத்திட
வலையின் மீனானேன்/
களையிழந்த நித்திரை
கலையானது நினைவால்/

சலங்கையொழி காதுவர
சதுரங்க வேட்டையாட/
உலவுகிற உள்ளம்
உறவாக்க உருகுதே/

உடையப் பாறையாய்
உடையோன் இதயத்தை/
இடையெனும் உளியால்
இடம்மாறியது உன்னிடமே/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (31-Mar-24, 12:52 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 34

மேலே