பெண்ணறிவோர் நுண்ணறிவாம்

நட்ச்சத்திரங்கள் பூமியிலே
நகர்ந்து வரும் மாயம் என்ன
நாளை நிலவு விடுமுறையாம்
உன்னை அழைக்கும் சேதி என்று

கவிதை பாடும் கணவனது
மனம் கோணா ரசித்தபடி
களைத்த குழந்தை பசியாற்றும்
பெண்ணறிவோர் நுண்ணறிவாம்

இட்லி தோசை பூரி பொங்கல்
இடியாப்பம் செய்து வைத்து
மதியம் ஒரு கூட்டுப் பொரியல்
மனம் கோணாமல் சமைத்து

ஐ டி பணியும் செய்கையிலே
மென்பொருளில் பழுதுபட்டால்
ஐந்து நொடியில் சரி செய்யும்
பெண்ணறிவோர் நுண்ணறிவாம்

நதியும் மலையும் உன் பெயராம்
நாணம் கூட உன் மொழியாம்
கருவில் குழந்தை கேற்க வேண்டி
கதைகள் சொல்லும் நுண்ணறிவாம்

எட்டு மைல் தூரத்தில் உன்
செல்ல மகன் அழுகையிலே
தூங்கிக் கிடக்கும் கண்களுக்குள்
ஈரம் உந்தன் நுண்ணறிவாம்

வலது கையால் வாணலியில்
மிளகு பொடி தூவிக்கொண்டு
இடது பக்கம் இருந்து வரும்
இன்னிசையை ரசித்துக்கொண்டு

அறையில் இருக்கும் கணவனது
கேள்விக்குமாய் பதில் உரைத்து
மாமனாரின் மாமியாரின்
தேவைகளை அறிந்தவண்ணம்

அழும் குழந்தை சத்தங் கேட்டு
அரை நிமிட இடைவெளியில்
ஆர வைத்த பால் கொடுக்கும்
பெண்ணறிவோர் நுண்ணறிவாம்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (31-Mar-24, 12:26 pm)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 39

மேலே