அன்பு மலர்களே
அன்பு மலர்களே
×××××××××××××××
பல்லவி
+++++++
பணம் உள்ளவரே... குணம் அற்றவரே.../
அன்பே ஆளுமே...எந்நாளும் அன்பே ஆளுமே/
நிலையற்ற வாழ்விலே/
பணமும் தேவையில்லையே/
அன்பே ஆளுமே ..எந்நாளும் அன்பே ஆளுமே../
.
சேயாக பூமியில் பிறந்த உடன் பிறந்தோர்
வாழ வழி தந்து ஈகை கை உயர்ந்தால்
அன்பே ஆளுமே /
சாலைகள் எங்கும் ஏழைகள் துறந்து
உறவு யாவும் வாழ்வில் உயர்ந்து
அன்பே ஆளுமே /
(அன்பே ஆளுமே..)
சரணம் 1
++++++++
ஈகை என்னும் குறள் சொல் படி நீயும்
நடந்தால் ஏழ்மை கிடையாது/
வறுமை ஒழிந்து வளரும் நாடு
வல்லரசாக மிளிரும் /(2)
பணம் குணம் ஈகை மூன்றும்
பிச்சைக்கு தடை போட்டு கை/(2)
யேந்தும் நிலை இல்லா நாடு பெற வேண்டும்/(2)
(அன்பே ஆளுமே ..)
வீதி எங்கும் தட்டை ஏந்தும்
ஏழைச் சொந்தங்களை /
அவர்கள் வாழ்வும் முன்னேற
உதவிகள் செய்யுங்களே../(2)
ஏழை பணம் எனும் பிரிவு
வேண்டாம் ஒன்று சேர்ந்து வெல்க/(2)
ஏழையின் சிரிப்பில் என்றும் இறவனை
காணலாம்/(2)
(அன்பே ஆளுமே..)
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்