தாக்கம் தொடங்கி துக்கம் வரை
நான் பிறந்து வளர்ந்தது கோடம்பாக்கம்!
இதனால் சினிமா பாடல்கள் என் மீது அதிகம் தாக்கம்!
பாடகனாகவேண்டுமென்று மனதளவில் மட்டும் ஆக்கம்!
ஏனோ கிடைக்கவில்லை எனக்கு சிறந்த ஊக்கம்!
அறுபதைக் கடந்தும் இன்னும் உண்டு இந்த ஏக்கம்!
அவ்வப்போது தொண்டையை அடைக்கிறது துக்கம்!
இதனால் தானோ என்னவோ இரவில் தடைபடுகிறது தூக்கம்!