கண்கள் தொடுக்கும் காதல் பாகம் 11
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம்: 11
சுவையான உணவும்,நோட்டு புத்தகமென உதவிகள் செய்து காதலிக்கவே பழகிய கெளதமை முழுத் தோழனாக மாற்றியிருந்தாள் திரிஷா..
Car,விலை உயர்ந்த இருக்கை,A/C Room, மூங்கில் நாற்காலி, கட்டில் மெத்தையென வசதியான திரிஷாவின் வீடு உயிருடன் இருக்கையிலே சொர்க்கமாக தெரிந்ததால், திரிஷாவை மீண்டும் காதலிக்கத் தூண்டியது.எப்படியும் திரிஷாவை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் வீடு தமக்கானதாக வேண்டும் என்று அண்ணாமலை ரஜினி போல் சபதம் எடுத்தான்..
Room கதவை திறந்து உள்ளே வந்த திரிஷா,வா கெளதம் சாப்பிடலாம் என்று அழைத்தவள் dining hall க்கு அவள் முன் செல்ல பசுவின் கன்றாக அவளை பின் தொடர்ந்தான்.
Normal , hot and cold water dispenser ,high quality wash basin, High quality wood 8 seat dining table ஆஹா hotel set-up wow ! என்றான் கெளதம்..
அதற்கு அவள் சிரித்தபடி அமருங்கள் விருந்தினரே என்றாள்.. செராமிக் தட்டு ஒன்றை எடுத்து அதில் பலாப்பழம் அல்வாவை வைத்து அவன் முன் வைத்தாள்.. சாப்பிடு கெளதம் என்றாள்..
கெளதம் ஒரு வாய் எடுத்து வைத்தவன் இது என்னவா இருக்கும்..! என்று சிந்திக்க.. திரிஷா அது பலாப்பழம அல்வா , நல்லாயிருக்கா என்றாள் அதற்கு அவன் super என்றான்,மூன்று வித சட்டினியுடன் நெய் ரவா ரோஸ்ட் 2 வைத்தாள் 1 நிமிடத்தில் சாப்பிட்டான், மீண்டும் தோசையை அவன் தட்டுக்கு கொண்டு சென்ற திரிஷாவின்... கைகளை பிடிக்க வேண்டும் என்றே இயல்பாக பிடித்த மாறி..கையைப் பிடித்து வேண்டாம் போதும் என்றான்.. அவன் கையை மெல்ல தட்டிவிட்டு நல்லா சாப்பிடு என்று தோசையை தட்டில் வைத்தாள்..
மருதாணி பூசப்பட்ட மெல்லிய தாமரை தண்டு போல் பொன் நிற கையால் திரிஷா நெய் தோசையை ஊட்டி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதில் நினைத்து மெய் மறந்தவன் வானத்திற்கே சென்றிருந்தான்.. கெளதம் இன்னொரு தோசை என்றவுடன் மீண்டும் பூமிக்கு வந்தவன்.. மீண்டும் அவள் கையை பிடிக்க வாய்ப்புக்கு ஏங்கினான் ..அவள் வாயால் சொல்ல தலையசைத்து தலையால் வேண்டாம் என்றான்....
பணப் பையோடு வந்த கமல் அதனை கெளதமிடம் கொடுத்து list ஒன்றையும் கொடுத்து சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிட்டு வந்திருங்க தம்பி என்றார்.. சரிங்க அப்பா என்று கிளம்பினான் காரில் ஏறினான்,டிரைவர் காரை நேர வெள்ளக்கண்ணு செட்டியார் மளிகை கடையில் நிறுத்துங்கள்..என்று சொல்லி விட்டு.. காதலுக்கு என்ன என்ன அடிமை வேலை பார்க்க வேண்டியுள்ளது என்று வைகைப்புயல் வடிவேலு மாறி புலம்பினான்...
....தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்