கல்லுக்குள் ஈரம்
கல்லுக்குள் ஈரம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அன்னையின் தியாகத்தால் உருவான இதயம்/
அன்பின்றி கல்லாக மாறுகிறது இதயங்கள்/
மனிதநேய மறந்த மலடான இதயங்கள்/
மண்ணில் இருந்து ஒன்றும் பயணில்லை/
வியர்வை சிந்தி விளைந்திட்ட பணத்தை/
வஞ்சகமாக கொள்ளையடித்த குள்ளநரிக் கூட்டங்கள்/
வறுமையில் இருப்பவனுக்கும் உதவிட இரக்கமற்ற /
வேதனைக்கு மருந்தாக இல்லாத ஈரமற்ற /
இதயங்கள் பாறையாக இருந்தாலும் சிறிதேனும் /
இயற்கையின் சுனையாக ஈரம் கசியட்டும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்