நலமுடன் வாழ்வோம்

நலமுடன் வாழ்வோம்


நவதானியங்கள் மறந்தோம் நாகரிகத்தில் மிதந்தோம்/
நலிவுற்ற உடம்பில் குதூகலமாக கிருமிகள்/
சரிவிகித உணவினை முற்றிலும் இழந்தோம்/
துரித உணவின் சுவைக்கு அடிபணிந்தோம்/

வலிமையற்ற உடம்புக்கு விருந்துண்ண வருகிறது/
வீரியமிக்க கொரோனா பாரதம் எங்கும்/
ஊட்டச் சத்தால் எதிர்க்க வேண்டியதை/
ஊரடங்கு உத்தரவில் தனிமையில் எதிர்க்கிறோம்/

பணியின்றி பசி பிணியால் துடிக்கிறோம்/
படைத்தவனே வந்துவிடு பழமையை தந்துவிடு/
ஒற்றுமையற்ற தேசத்தில் பேதம் மறந்து/
ஒன்றுபட்ட மக்களாக நோய்களை விரட்டிட/

உலகத்தை ஆட்கொள்ளும் உயிர்க்கொல்லிக் கிருமிகளை/
உரு தெரியாமல் அழித்திட உறுதியேட்போம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (6-Apr-24, 6:57 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 31

மேலே