சமூக கவிதை

பெற்றோர் பெரிதாவர் செல்வமதைக் காட்டிலும்
மற்றவை அவர்களின் பின்பு

பெற்றோர்க்கு உதவிடுதல் பெண்ணுக்கோ ஆணுக்கோ
போற்றுதற்க் குரியப் பொறுப்பு

விளையும் நிலங்கள் விலையானால் பயிர்களின்றி
விளைவானால் உயிர்களுக்கு வீழ்வு

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (30-Mar-24, 8:35 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 107

மேலே