எண்ணித் துணிக கருமம்

எண்ணித் துணிக கருமம்
××××××××××××××××××××××
எண்ணித் துணிந்தால்
ஏற்றங்கள் உண்டு/
கண்ணியம் இருந்தால்
காரியங்கள் எளியதே/

கடின உழைப்பு
கடிவாளம் உயர்வுக்கு/
பிடித்த தொழில்
படிக்கல்லாக மாறுமே/

திருந்தச் செய்தல்
திருப்பம் வருமே/
விரும்பி முனைதல்
விழுதாக தாங்குமே/

ஊகத்தை விலக்கி
ஊக்கமுடன் முயன்றிடு/
சோகங்கள் தீண்டாது
சொர்க்கமாகும் வாழ்வுமே/

முன்னேறிச் சென்றிட
முடிவெடு திட்டமிட்டு/
பின்பற்று நாணயத்தை
பன்மடங்காகும் நாணயமுமே/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (30-Mar-24, 8:30 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 28

மேலே