தாய்மொழியைப் போற்றுதல் தரணிக்கே பெருமையன்றோ

தாய்மொழியைப் போற்றுதல்
தரணிக்கே பெருமையன்றோ/
வாய்வழி உரையாடல்
வானாகப் பரவிடுமே/

அகர முதலாகி
அகிலமொழி தாயாவாள்/
நிகராக எம்மொழியும்
நிலத்தில் யாதுமில்லையே/

மலைத் தோன்றி
மதுரை வளர்ந்து/
தலையான தேன்தமிழ்
திகாட்டாது பேசிடவே/

மாங்கனி சுவையாக
மக்களுக்கு அறமூட்ட/
தங்கமாக மின்னிடுவர்
தமிழைக் கற்றோரே/

எழும்புக்குள் குருதியாக
ஏட்டினில் கதைபாடி/
எழுப்புகின்ற சிந்தனை
ஏணியாகும் உயர்மைக்கே/

இருமொழிக் கொள்கை
இருட்டடிப்பு செய்வினும்
துருதுருவென செழித்தோங்கி
தூள்தூளாக்கியது ஆங்கிலமோகத்தையே/

பேச்சில் ஊடுருவி
பேராபத்து தருவினும்/
மூச்சுக் காற்றும்
முத்தமிழே தமிழனுக்கே/

கன்னித்தமிழ் புதுப்பொலிவாக
கணினித் திரையெற/
அன்னை நடைபோட்டு
அகிலத்தை சுற்றுதாளே/

மேலநாட்டு பண்பாடு
மேலாடை மாற்றினும்/
தாலட்டும் தாயல்
தலைமுறை காணுமே/

சங்ககாலம் தொட்டு
சான்றோர் வலுப்பெற்று/
மங்காதப் பாசூட
மரபுடனே வாழ்ந்திடுமே/

வெல்ல மொழியில்லை
வல்லமை தமிழ்தனை/
இல்லாத தில்லை
இணையில்லை செந்தமிழுக்கே/

தாய்தந்த தாய்மொழி
தமிழ்பேசுவது தாழ்நிலையெனும்/
நோய்நொடிக்கும் மருந்தாகும்
நொடிபொழுதும் மறவாதீர்/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (15-Apr-24, 1:12 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 750

மேலே