லாட்டரி சீட்டு

லாட்டரி சீட்டு

வாங்கும் பொழுது மனம் படபடக்கும்
வாங்கிய பின்னால் மனம் மிதக்கும்
வரவை எண்ணி மனம் குதிக்கும்
செலவை எண்ணி மனம் திளைக்கும்
வாழ்வின் வசந்தங்களை மனம் நினைக்கும்
வரும் நாட்களை எண்ணி மனம் களிக்கும்
முயற்சிகளை மனம் வெறுக்கும்
கனவினில் மனம் மயங்கும்
கடமைகளை மனம் மறக்கும்
காற்றினில் மனம் பறக்கும்
காசுகளை எண்ணி மனம் வியக்கும்
காலை கதிரினில் மனம் விழிக்கும்
தினசரி கண்டதும் மனம் கொதிக்கும்
மாயவனை திட்டி மனம் அடங்கும்
மறுநாளை எண்ணி மனம் நடக்கும்

எழுதியவர் : கே என் ராம் (16-Apr-24, 8:57 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : laattari seettu
பார்வை : 17

மேலே