கண்கள் தொடுக்கும் காதல் பாகம் 24

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம்: 24

" காதல் கண்களை மறைக்கலாம் " ஆனால் " அப்பா அம்மாவின் தியாகத்தை மறப்பது கண்களையே இழந்ததுக்கு சமம் " கண் விழித்த திரிஷாவை பார்த்து செவிலியர் கேட்டு விட்டு நகர்ந்தார்..

திரிஷா கெளதமிடம்" நான் எப்படி மருத்துவமனையில் ? " என்று கேட்டாள்..

கரிவலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது " திடிரென்று மயக்கம் போட்டு சரிந்தாள் திரிஷா , பேச்சு மூச்சு இல்லாமல் சுருண்டு கிடந்தவளை ..திரிஷா .. திரிஷா.. என்று அழைத்தான் கெளதம், அசைவின்றி கிடந்தாள் திரிஷா ..

சத்தம் கேட்டு ஓடிவந்த ஆட்டோ ஓட்டுனர், அவரின் நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் திரிஷாவின் மூக்கின் அருகே கை வைத்து பார்த்தவர், உயிர் இருக்கு என்று சொல்லி  ஆட்டோவை அவள் அருகே கொண்டு வந்தவர்..அவளை ஆட்டோவில் ஏற்றி, கரிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்..

பரிசோதித்த மருத்துவர் நாடித்துடிப்பு 70 க்கு 55 தான் இருக்கு, ஏதும் சாப்பிட்டாங்களா என்று கெளதமை பார்த்து கேட்டார் மருத்துவர்.. அவன் இல்லை சார் என்றான்.. சாப்பிடாமல் இருந்ததால் சின்ன மயக்கம் ஒரு iv drip ஒன்று போடுவோம் சரியாயிடும், என்று சொல்லி  சென்றார்.

செவிலியர் 5 % dextrose iv fluid 500 ml  ஒன்றை போட்டு விட்டு.. கெளதமையும் திரிஷாவையும் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு..என்ன காதலா..? என்று கெளதமை பார்த்து கேட்டார்.. கெளதம் தலையை மட்டும் ஆட்டினான்..

500 ml drip பாட்டிலில் 300 ml இறங்கியிருந்தது.. திரிஷா மெதுவாக கண்ணை திறந்து பார்த்தாள்..அதே நேரம் செவிலியர் அங்கே வந்தார்.. திரிஷாவை பார்த்து சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு? என்று கேட்டார்.. தயங்கிய வாரே இரண்டு நாள் ஆச்சு மேடம் என்றாள்..

"  அப்பா அம்மாவாக இருந்திருந்தால் ஒரு வேளை கூட சாப்பிடாமல் உன்னை விட்டிருப்பாங்களா ? என்று கூறியவர்.. கெளதமை பார்த்து, சாப்பாடு வாங்கிட்டு வந்து கூடு , மூஞ்சியை பார்..ஒரு வேளை சாப்பாடு கொடுக்க வழியில்லை இதுக்கெல்லாம் லவ் ஒரு கேடு , என்றார்..

கெளதம் சாப்பாடு வாங்கி வந்நிருந்த .. அந்நேரம் திரிஷா தூங்கிருந்தால்..

இப்படியாக நடந்தவற்றை கெளதம் சொல்ல நடந்ததை அறிந்தாள் திரிஷா..

இருவரும் சாப்பிட்டு வந்து செவிலியர் க்கு நன்றி சொல்வதற்கு தேடினார்கள்..அவர் பிரசவத்திற்கு சென்று உள்ளதாக உள் வேலை பார்ப்பவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே செவிலியர் வந்தார்.

திரிஷாவை பார்த்து பரவாயில்லையா? என்று கேட்டார் செவிலியர்..yes mam என்றாள்.அவளை மட்டும் தனியாக அழைத்து பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றார்.

அங்கு ஒரு தாய் தன் சிசுவை பெற்று எடுக்க உருண்டு கொண்டு இருந்தாள்..பின் அவளை பெரிய பெஞ்சில் படுக்க வைக்கப்பட்டு கால்களை விரித்து கட்டப் பட்டது.. தாய் வலியால் துடித்தாள்.. அம்மா முடியல அப்பா முடியல என்று அலறிய  தாயை சுற்றி நின்ற மருத்துவரும்.. ஊழியர்களும் முக்கு முக்கு என்று கூறிக்கொண்டே இருக்கும் போதே செவிலியர் தொடையில் ஒரு அறை விட்டார் .. தாய் முக்கினாள் குழந்தையின் தலை வெளியே தெரிய  ஊழியர் ஒருவர் வயிற்றை கீழ் நோக்கி பிரஸர் கொடுக்க..சில நிமிட போராட்டத்திற்கு பிறகு..உடலை கிழித்தபடி குழந்தை வெளியே வந்தது..தாய் மயங்கினாள்.. குழந்தையை தூக்கி தாயின் முகத்தின் அருகே கொண்டு சென்ற செவிலியர் தாயின் கன்னத்தை வருட தாய் இறந்து மீண்டும் பிறந்தவள் ஆக கண் திறந்தாள் குழந்தையை கண்ட மகிழ்ச்சியில் அத்தனையும் ஒரு நொடியில் மறந்தவளாக அவளும் ஒரு குழந்தையாக புன்னகைத்தாள்..

செவிலியர் திரிஷாவிடம் ஒரு தாயின் பேறுகாலம் என்பது ஒரு வசந்த காலம் அல்ல , வலியின் அவலமான காலம்..இந்த வலியை அந்த தாய் அவளின் சுகத்துக்காக அனுபவிக்க வில்லை..அவளின் குழந்தைக்காக , அந்த தாயை போல் உன்னை ஈன்றெடுத்த தாயும்..வலியை அனுபவித்து இருப்பாள்.. பெற்றோரா ? காதலனா? உணர்ந்து முடிவெடு ..

திரிஷா இப்போது என்ன முடிவெடுக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்...

..... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (21-Apr-24, 12:12 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 40

மேலே