மலைக்கத் தக்க மனிதன்
சதிக்குட் பட்ட நிலையினால்
சபிக்கப் பட்ட ஒருவனாய்
விதிக்கப் பட்ட விதியினால்
விதைக்கப் பட்டு விடுவதால்
மிதிக்கப் பட்டு மரமதாய்
மினுக்கப் பட்டு மெழுவதால்
மதிக்கத் தக்க வகையினால்
மலைக்கத் தக்க மனிதரே
* * * * * * * * * * * * * *'* ** * *
அறுசீர் ஆசிரிய வண்ண விருத்தம்.