நம்ம ஊர்ல ஒரு வால் கூட இல்லையே

என்ன யக்கா எதோ மொணகிட்டு இருக்கிற?

@@@@@@@@@

எல்லாம் 'வால்' பத்தித்தாண்டி காத்தாயி.

@@@@@@

என்னது வால் பத்தியா? நம்ம ஊர்ல வாலுக்கா பஞ்சம், எத்தனை

ஆடுகள், மாடுகள், எருமைகள் இருக்குது, எல்லாத்துக்கும் வால்

இருக்குதே.

@@@@@

அடியே காத்தாயி நாஞ் சொல்லறது அந்த வால்களைப் பத்தி.

இல்லடி.எனக்கு நூத்திரண்டு வயசு ஆகுது, நீ என்னைவிட அஞ்சு

வயசு சின்னவ, உம் பேரு மட்டும்தான் தமிழ்ப் பேரு, எம் பேரு

'கவ்சல்யா'கூட இந்திப் பேரு தான். நம்ம ஊர்ல் நூத்துக்குத்

தொண்ணுத்தொம்பது பேரு இந்திப் பேருங்க தான். ஆனா

இருந்தாலும் வடக்க இருக்கிறவங்க பலர் அவுங்க பேருகூட 'வால்'னு

சேத்து வச்சுக்கிறாங்க. நம்ம ஊர்ல ஒரு வாரக் குழந்தையிலிருந்து

நூத்திரண்டு வயசு வரை எல்லாம் இந்திப் பேருங்களைத்தான்

வச்சிருக்கிறாங்க. ஆனா இதுவரைக்கும் நம்ம ஊர்ல உள்ளவங்க

பேருங்கள்ல ஒரு பேருகூட 'வால்'னு முடியல அதுதான் எனக்கு

வருத்தமா இருக்குதடி காத்தாயி.

@@@@@@@

அதுக்கு நாம என்னயக்கா செய்யறது?

@@@@@@@@@@@

என்னோட எள்ளுப் பேரன் மனைவிக்கு அடுத்த மாதம் மகப்பேறு,

அந்தக் குழந்தைக்கு 'உச்சுவால்'னு (உஜ்வால்) பேரு வைக்கசொல்லி

என்ற எள்ளுப் பேரன்கிட்டச் சொல்லிட்டேன்.அவனும் சரினு

சொல்லிட்டான்.இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குதடி காத்தாயி.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Ujjwal = Bright.

எழுதியவர் : மலர் (4-May-24, 6:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 33

மேலே