தீராதே
தீராதே அருகிலே நீ வர
மாறதே உயிரிலே தீ இட
வரைகிறாய் காதலை இதயத்திலே
முகமாதல் வேண்டுகிறேன்
முகமறிவு தேவையில்லை
முக்காலம் ஆனாலும்
எந்நாளும் நீதானே......
கரைக்காதே பார்வையால் சுட சுட
நொறுக்காதே வார்த்தையால் தொட தொட
விரிக்கிறாய் காமத்தை திரையினிலே
மாயக்காதல் பார்க்கிறேன்
மயக்கவாசம் வீசுகிறாள்
மடையை மீறி போனாலும்
நிலத்தோடே நீர் சேருமே....