டிஜிட்டல் தீர்ப்பு
காலங்காலமாக
மக்களை ஏமாற்றி
தேர்தலில் வெற்றிப் பெற்று
மக்களை தவிக்க வைத்த
அரசியல்வாதிகளுக்கு
இந்த தேர்தல் மூலம்
வாக்காளர்கள்
"டிஜிட்டல்" முறையில்
துல்லியமாக கணித்து
தீர்ப்பை வழங்கி
அவர்களை உறக்கம்
இல்லாமல் செய்து
ஜனநாயகத்தை காப்பாற்றி
மக்கள் தீர்ப்பே மகேன் தீர்ப்பு என்று உணர செய்து விட்டார்கள்.
--கோவை சுபா