பியா

மக்கள் தொகை கணக்கு எடுக்க வந்த

அரசு ஊழியர் ஒரு வீட்டில் "ஐயா, நான்

மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பணி

தொடர்பாக வந்திருக்கிறேன். உங்கள்

வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீங்க?"

@@@@@

பத்து பேர்.

@@@@@@

சரி குடும்பத் தலைவர், குடும்ப

உறுப்பினர்கள் பெயர்கள் வயது, கல்வித்

தகுதி, தனி வருமானம் சாதி

ஆகியவற்றைக் கூறுங்கள் ஐயா.

@@@@@@

(குடும்பத் தலைவர் எல்லா

விவரங்களையும் கூறுகிறார்).

@@@@@@

ஐயா உங்கள் பேத்தி பெயர் 'பியா'னு

கூறினீங்க. அந்தப் பேரைப் பத்திக்

கொஞ்சம் சொல்லுங்க ஐயா.

@@@@@@

ஐயா, 'பியா' இந்திப் பேருங்க. உலகத்

தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு

இந்தப் பேரை வைத்திருக்க

வாய்ப்பில்லை.

@@@@@@

நல்லதுங்க ஐயா. உங்கள் குடும்பத்தில்

எல்லோருடைய பேரும் இந்திப் பேரு.

தற்கால தமிழர் நாகரிகப்படி எல்லாம்

இந்திப் பேருங்க. பெருமைப்படக்கூடிய

விசயம். "பியா'ங்கிற பேருக்கு என்ன

அர்த்தம்?

@@@@@@


அதெல்லாம் தெரியாதுங்க. தமிழர்களில்

பெரும்பாலோர் அர்த்தம் தெரியாத இந்திப்

பேருங்களைத் தான் வைக்கிறாங்க. சரி

உங்கள் பேரு என்னங்க?

@@@@@

என் பேரு கிஷோர்‌.

@@@@@

அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்?

@@@@@@

தெரியாதுங்க ஐயா‌.

@@@@@@@

அது மாதிரி தான் எங்கள் குடும்பத்தில்

எல்லோருக்கும் இந்திப் பேருங்க. எந்தப்

பேருக்கும் அர்த்தம் தெரியாது. அதைப்

பத்தி எங்களுக்கு கவலை இல்லை. தமிழ்ப்

பேரை யாருக்கும் வைக்கல. அது போதுங்க

நாங்கள் பெருமைப்பட.

@@@@@

நீங்கள் சொல்வறதும் நூத்துக்கு நூறு சரிதாங்க.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Piya = Tree, Heavenly. Feminine name.

எழுதியவர் : மலர் (8-Jul-24, 6:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே