குளிர்
குளிர்
விடிய போகும்
காலையில்
வீசிடும் மெல்லிய
குளிர் காற்று
வீட்டு திண்ணையில்
போர்த்தி படுத்திருக்கும்
அவனது
போர்வைக்குள்
புகுந்து
கிச்சு கிச்சு
மூட்டுகிறது
போர்வையை இறுக்கி
நெளிந்தும் குறுக்கியும்
படுத்து பார்த்தவன்
முடிவாய் முடியாமல்
எழுந்தவன்
அருகே இருந்த
குளிர்ந்திருந்த
தொட்டி தண்ணீரை
முகத்தில் அடித்து
அலம்பினான்
கிச்சு கிச்சு மூட்டிய
குளிர்
காணாமல்
போயிருந்தது