வெண்மதிக்கு ஒரு வெண்பா

தேய்ந்தாலும் வெண்மதிநீ தேனொளி வீசிடுவாய்
தேய்ந்துதேய்ந்து கீற்றாய் பிறையாய் ஒளிர்ந்திடுவாய்
ஓய்ந்து ஒருநாள் ஒளிந்துகொள் வாய்வானில்
காய்வாய்மீண் டும்முழு தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-24, 8:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே