நோக்கர்

அண்ணா, என் பையன் பிறந்து ஒரு

வாரம் ஆகுது. எனக்கு ஆண் குழந்தை

பிறந்தாலும் பெண் குழந்தை பிறந்தாலும்

குழந்தைக்குத் தாய் மாமன் ஆன நீங்க

தான் "நான் தான் பேரு வைப்பேன்"னு

சொன்னீங்க. நல்ல அழகான இந்திப்

பேராச் சொல்லுங்க அண்ணா.

@@@@@@@

கண்மணி, நானும் ஒரு வாரமாச்

சிந்தித்துப் பார்த்தேன். எந்தப் பேரும்

சரிவரல. இன்னிக்கு பாரிஸ் ஒலிம்பிக்கில்

நம்ம இந்திய வீராங்கனை மனு பாக்கர்

முதல் பதக்கத்தைப் பெற்ற தகவலை

தொலைக்காட்சி செய்தில காட்டுனாங்க.

அதைப் பார்த்த உடனே உன் பையனுக்கு

நான் வைக்க வேண்டிய பேரு

உருவாகிருச்சும்மா.

@@@@@@@

அதைச் சீக்கிரம் சொல்லுங்க அண்ணா.

@@@@@@

உன் பையன் பேரு 'நோக்கர்'.

@@@@@@

அருமையான பேரு அண்ணா. இந்திப்

பேரா?

@@@@@@

இந்திப் பேரு இல்லை கண்மணி. அழகான

தூய தமிழ்ப் பெயர். தமிழில் அழகான

பெயர்கள் இருக்கும் போது நாம் ஏன் வேற

மொழிகளில் உள்ள பேருங்களை நம்ம

பிள்ளைகளுக்கு வைக்கணும்?

@@@@@@@

'நோக்கர்'ருக்கு என்ன பொருள் அண்ணா?

@@@@@@

'நோக்கு'ன்னா 'பார்'னு பொருள். கம்ப

இராமாயணத்தில் "அண்ணலும்

நோக்கினான்; அவளும் நோக்கினாள்"னு

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர்

பார்த்துக் கொண்டதாக கம்பர்

விவரிக்கிறார். பழைய மலையாளம்

பழந்தமிழே. தமிழ்ச் சொற்களை நீக்கி

வீட்டு மலையாள மொழியைப் பயன்படுத்த

முடியாது. 'இவ்விடே நோக்கு'னு

மலையாளத்தில் கூறினால் அதற்கு

'இங்கே பார்' என்று பொருள்.

@@@@@@@

நோக்கர் அருமையான பேரு அண்ணா.

பேரு 'ர்'ல முடியறதுனால மரியாதையான

பேரு அண்ணா.

எழுதியவர் : மலர் (28-Jul-24, 4:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 46

மேலே