காத தூரமே

காத தூரமே....!
31 / 07 / 2024

காதலினால் பல கனவுகள் தோன்றும்
கனவினை வென்றிட காதலே மந்திரம்.
மந்திரம் போலவே காதலை போற்றிட
இந்திர லோகத்து கதவுகள் திறந்திடும்.
எண்ணங்களினால் நல்ல வீடொன்று சமைத்திடு
எண்ணங்கள் போலவே வாழ்ந்திட முயன்றிடு
எண்ணம்போல் வாழ்க்கை உன்
எண்ணம்போல்தான் வாழ்க்கை புரிந்துகொள்.
பிறப்பின் ரகசியம் அறிந்திடத்தானே பல
முனிவரும் வனத்தினில் கடுந்தவம் செய்தனரே
இறப்பொன்று வருவதற்குள் உன்னை புரிந்துகொள்
உள்ளத்தில் நல்ல எண்ணத்தை வளர்த்திடு
உள்ளுக்குள் உன்னையே தினமும் தேடிடு
கடுந்தவம் தேவையில்லை யாகமும் தேவையில்லை
கடுகியே வந்திடுவான் இமயத்து சிவனும்
காலனும் ஓடிடுவான் காத தூரமே.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (31-Jul-24, 8:00 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 44

மேலே