மக்கள் முதல்வர் நரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்துக் கவி

மக்கள் முதல்வர் திரு ந. ரங்கசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவி

மக்கள் துயர துடைக்க உருவாக்கப்பட்ட எல்லா சாமிகளும் கருவறையிலேயே நிற்கின்றன.

கருவறையைத் தாண்டி வந்து மக்களின் துயர் துடைத்த ஒரே சாமி
அவர்தான் ரங்கசாமி


கந்தசாமி யாருக்கும் கொடுக்காமல் தன் கையில் வைத்திருந்தார் வேலை

ரங்கசாமி மக்களுக்குக் கொடுத்தார் தன்னால் முடிந்த அளவு வேலை

அதனால் மக்கள் இவர் கையில் கொடுத்தனர் செங்கோலை
இவர்தான் பாளையாய் கிடந்த புதுவையின் வயிற்றில் வார்த்தார் பாலை
அதனால் புதுவை ஆனது சோலை

இவர் காமராஜரின் நகல்
கர்ணனிடமிருந்து தெறித்த துகள்
இவர் விழி திறக்கும் போதெல்லாம்
இருண்ட ஏழை குடிசையில் ஏற்றினார் அகல்
இவர் விழித்திருக்கும் நேரம் தான் ஏழை மக்களுக்குப் பகல்

ஏழை மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு பெண்ணை மணக்காது இப்புதுவை மண்ணை மணந்தவர்

இவர் புதுவையில் தோன்றிய புது வைரம் புதுவை மக்களுக்கு கிடைத்த புது வரம்

இவரின் நீலமை
பச்சையாகும்போதெல்லாம்
விவசாயிகளின் வாழ்க்கையும் பச்சையானது
இவரின் பேணாமை தலைகுனியும் பொழுதெல்லாம்
முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையும் தலை நிமிர்ந்தது

கடவுள் பூமியைக் காக்க எடுத்த அவதாரம் தான் நரசிங்க சாமி அவர் புதுவையை காக்க எடுத்து அவதாரம் தான் ந.ரங்கசாமி

நாடி வந்த சனங்களுக்கு ஓடி உதவி செய்ததால் தானாய் இவரைத் தேடி வந்தது அரியாசனம்
இன்னும் இவரின் மனதை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றது சில அறியா சனம்

இவரின் கைகள் சற்றே குட்டையானது ஏழைகள் கண்ணீர் துடைப்பதில் கைகுட்டையானது

இவர் ஊராண்டும் இப்பாராண்டும் நூறாண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

இந்திய பெருங்கடலாய் இவர் புகழ் நீண்ட இருக்கட்டும் இவ்வுலகை ஆண்டு இருக்கட்டும் அதற்கு துணையாய் இந்த 2024ஆண்டு இருக்கட்டும்

எழுதியவர் : குமார் (13-Aug-24, 9:46 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 27

சிறந்த கவிதைகள்

மேலே