பெண்மை பேசுகிறது-8

💟💟💟💟💟💟💟💟💟💟💟

*பெண்மை பேசுகிறது - 8*

ஆதாரம் இல்லாத
முல்லைக்கொடியாய்
அலைகழித்துக்
கொண்டிருந்தேன்....
நீயோ !
பாரி மன்னனாய்
தேர் கொடுக்கவில்லை
"உன்னையே"
கொடுத்து விட்டாய்....!

அடைக்கலம் தேடி வந்த
என் காதல் புறாவிற்காக
சிபி மன்னன் போல்
உடல் தசையை
நீ கொடுக்கவில்லை
உன் "இதயத்தையே!"
கொடுத்தாய்......

ஒரு மழைக்காலப் பொழுதில்
நான்
குளிரில் நடுங்கி போது...
பேகன் என்னும் மன்னன்
மயிலை
போர்வையால்
போர்த்தியது போல் அல்லாமல்.....
"உன்னாலேயே
போர்த்தி விட்டாய் ...!"

கடையெழு
வள்ளல்கள் எல்லாம்
உனக்கு முன்னால்
கடை வள்ளல்கள் தான்
நீ தான் முதல் வள்ளல்.......!!!

- *கவிதை ரசிகன்*
குமரேசன்

💟💟💟💟💟💟💟💟💟💟💟

எழுதியவர் : கவிதை ரசிகன் (13-Aug-24, 10:45 am)
பார்வை : 59

மேலே