குறையிலும் நறையுள்ளது

⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️

*குறையிலும்*
*நிறையுள்ளது*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️


இருளை நேசி !
இருள்தான்
எடிசனை
வெளிச்சத்திற்கு
கொண்டு வந்தது......

பள்ளத்தையும் விரும்பு
பள்ளம் தான்
குளம் குட்டை
ஏரி கடல்களை உருவாக்கியது...

விழுவதை வெறுக்காதே
ஆப்பிள் விழுந்ததால் தான்
நியூட்டன்
புவிஈர்ப்பு விசையைக்
கண்டுபிடித்தார்......

தோற்றால்
கண்ணீர் விடாதே !
பதினாறு முறை
தோற்றதால் தான்
கஜினி வரலாற்றில்
இடம் பிடித்தான்.....

யாரையாவது
இழந்தால்
இறந்து விடாதே....!
ஷாஜகான்
மும்தாஜை இழந்து தான்
உலக அதிசயமான
தாஜ்மஹாலைப் பெற்றான்.....

தள்ளிவிட்டால்
மனம் தளர்ந்து போகாதே,...!
இரயில் பெட்டியில் இருந்து
காந்தியை
தள்ளிவிட்ட போது தான்
அவருக்குள்
எழுந்து நின்றது வீரம்.....

ஒதுக்கி வைத்தால்
ஓ....! என்று அழுவாதே....!
அம்பேத்கரை
ஒதுக்கி வைத்த போது தான்
அவர் தன்னை
செதுக்கிக் கொள்ள முடிந்தது....

*கவிதை ரசிகன*

எழுதியவர் : கவிதை ரசிகன் (17-Aug-24, 8:14 pm)
பார்வை : 41

மேலே