ஆகிரிதி போகிரிதி

அம்மா, நானும் சுவ்வாதியும் ஒரு பெண் குழந்தைக்கு வேண்டி தவம்


இருந்தோம். இப்ப இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருக்குதே!


ஒரே கவலையா இருக்குது. என்ன செய்யறது?


@@@@@@@@@

ஏண்டா புரேசு, ஆண்டவன் புண்ணியத்தில இரண்டு மகாலட்சுமிங்க

பொறந்திரூக்கறாங்க. நீ குடுத்து வச்சவண்டா. இதில வருத்தப்பட


என்னடா இருக்குது புரேசு.

@@@@@@@@@

இரட்டைப் பெண் குழந்தைகள். இரண்டுக்கும் ஒரே மாதிரி

பொருத்தமான பேரா வைக்கணுமே. அதைப் பத்தித்தான் அம்மா

நான் ரொம்பக் கவலைப்படறேன்.

@@@@@@@@@@@

நீ கவலையேபடாதடா புரேசு. நான் இன்னிக்கு செய்தில ஆகிரிதி'

மந்த்வாணினு ஒரு பேரைச் சொன்னாங்க. அதில முதல் பேரான

ஆகிரிதி எனக்குப் பிடிச்சிருக்கு. அதை ஒரு குழந்தைக்கு

வச்சிடலாம்.

@@@@@@@@@@@

சரிம்மா. இன்னொரு குழந்தைக்கு என்ன பேரை வைக்கிறது?


@@@@@@@@

அதைப் பத்திக் கவலையே படாதடா புரேசு. பொண்ணாப்

பொறந்தா ஒருத்தர் வீட்டுக்கு வாழப்போறவ தானே. அதனால

இரண்டாவது குழந்தைக்கு 'போகிரிதி'னு வச்சிடலாண்டா புரேசு,

போகிரிதி இந்திப் பேருன்னு நம்ம சனங்க்கிட்டச் சொன்னாப்

போதும் "ஆகிரிதி - போகிரிதி பொருத்தமான பேருங்க. சுவீட்டு

இந்திப் பேருங்க"னு பாராட்டுவாங்கடா புரேசு.

@@@@@@@@

ஆகிரிதி - போகிரிதி சுவீட்டு நேமுசு அம்மா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Aakriti = Shape

எழுதியவர் : மலர் (28-Aug-24, 5:41 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 24

மேலே