திருவள்ளுவர் முதல் வாலி வரை , இரண்டாவது வரியை மாற்றிய துரை

திருவள்ளுவர் நகரில் ஒரு வாசகம்:
என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை கடனை திரும்பத்தராதவனுக்கு

பாரதியார் சாலையில் ஒரு அறிவிப்பு:
வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்
கூவம் ஆற்றை மூடச்சொல்லி சத்தமிடுவோம்

கம்பர் தெருவில் ஒரு வாசகம்:
ராமன் சீதையை நோக்கினான் சீதை பூமியை நோக்கினாள்
சோமன் கோதையை நோக்கினான் கோதை ஐபாடை நோக்கினாள்

பாரதிதாசன் குறுக்குத்தெருவில் ஒரு வாசகம்:
பாரதி பாடிய தமிழின் தாசன், நான் பாரதிதாசன்
அவருடைய ஒன்றுவிட்ட பேரன், நான் பாதிதாசன்

கண்ணதாசன் பூங்காவில் ஒரு வாசகம்:
வீடுவரை உறவு வீதிவரை மனைவி
மதியம்வரை வாட்ஸாப் இரவுவரை இன்ஸ்டாகிராம்

கவிஞர் வாலி மண்டபத்தின் நுழைவாயிலில்:
ராமன் பாணம் போட்டார், வாலி காலி
வாலி பாட்டு போட்டார், ரசிகர்கள் காலி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Sep-24, 11:00 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 23

மேலே